சர்க்கரைப் பொங்கல்
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. பச்சரிசி - 200 கிராம்
2. வெல்லம் - 400 கிராம்
3. நெய் -75 மி.லி
4. வறுத்த முந்திரி - 15 எண்ணம்
5. உலர்ந்த திராட்சை - 15 எண்ணம்
6. ஏலப்பொடி - சிறிதளவு
7. பச்சைக் கற்பூரம் - 1 சிட்டிகை
8. குங்குமப்பூ - 1 சிட்டிகை (விரும்பினால்)
9. பால் - 200 மி.லி
செய்முறை :
1. தேவையான அளவு தண்ணீருடன் பாலைச் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
2. கொதி வந்தவுடன் அரிசியைப் போடவும்.
3. சாதம் நன்கு குழைய வெந்தவுடன், வெல்லத்தைப் பொடித்து போடவும்.
4. பின் ஏலக்காய்த் தூளுடன், திராட்சையை நெய்யில் வறுத்துப் போடவும்.
5. அடுத்து, வறுத்த முந்திரி, பச்சைக்கற்பூரம், மீதமுள்ள நெய் அனைத்தையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
குறிப்பு:
1. குக்கரில் வைத்தால் 1பங்கு அரிசிக்கு 4 பங்கு பால் / தண்ணீர் வைத்து, வெயிட் போட்டு 10 நிமிடத்தில் இறக்கிவிடலாம்.
2. வெல்லத்தை பொடித்து, தண்ணீர் விட்டு கொதி வந்தவுடன் வடிகட்டி, பாகாகக் காய்ச்சி,வேகவைத்த பொங்கலுடன் கலக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.