அவல் ஜவ்வரிசி பொங்கல்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. அவல் -1 கப்
2. ஜவ்வரிசி - 1 கப்
3. பாசிபருப்பு - 1/2 கப்
4. தேங்காய் (துருவியது) - 1/2 கப்
5. நெய் - 5 தேக்கரண்டி
6. முந்திரிப்பருப்பு - 10 எண்ணம்
7. உப்பு - தேவையான அளவு
தாளிக்க
8. கடுகு - 1/2 தேக்கரண்டி
9. சீரகம் - 1 தேக்கரண்டி
10. மிளகு - 1 தேக்கரண்டி
11. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
12. கறிவேப்பிலை - சிறிது
13. துருவிய இஞ்சி - சிறிது
செய்முறை :
1. முதலில் பாசிபருப்பை வேக வைத்துகொள்ளவும்.
2. ஜவ்வரிசியை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
3. அவலைக் கழுவி நீரை வடித்து ஊற வைத்துக் கொள்ளவும்.
4. அடுப்பில் வாணலியை வைத்து நெய் ஊற்றி அதில் முந்திரிப் பருப்பை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
5. மீதமுள்ள நெய்யில் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு வதக்கவும்.
6. அது வதங்கியது வேகவைத்த பாசிபருப்பு, ஊறவைத்த ஜவ்வரிசி, அவல் மற்றும் உப்பு போட்டு நன்கு கிளறவும்.
7. கடைசியில் துருவிய தேங்காயை போட்டு நன்கு கிளறி இறக்கவும்.
8. அதில் வருத்த முந்திரியைக் கொண்டு அலங்கரிக்கவும்.
குறிப்பு: தேங்காய்ச் சட்னி சேர்த்துச் சாப்பிட சுவையாக இருக்கும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.