சாமை அரிசிப் பொங்கல்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. சாமை அரிசி - 1 கப்
2. பாசிப்பருப்பு - 1/4 கப்
3. மிளகு - 1 தேக்கரண்டி
4. சீரகம் - 1 தேக்கரண்டி
5. பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
6. உப்பு - தேவையான அளவு
7. இஞ்சி - 1 துண்டு
8. நெய் - 100 கிராம்
9. கருவேப்பிலை - சிறிது
செய்முறை :
1. அரிசி, பருப்பு, இரண்டையும் களைந்து மூன்று கப் தண்ணீர் விட்டுக் குக்கரில் 4 விசில் வைக்கவும்.
2. அதனை ஒரு கரண்டியால் மசிக்கவும்.
3. ஒரு வாணலியில் நெய் விட்டுக் காய்ந்ததும், மிளகு, சீரகம், நறுக்கிய இஞ்சி சேர்த்துத் தாளிக்கவும்.
4. அதனுடன் பெருங்காயத்தூள், கருவேப்பிலை சேர்க்கவும்.
5. அந்தத் தாளிசத்தைப் பொங்கலில் சேர்த்து, உப்பு சேர்த்துக் கிளறவும்.
குறிப்பு: தேங்காய்ச் சட்னி சேர்த்துச் சாப்பிட சுவையாக இருக்கும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.