கோதுமை பொங்கல்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. சம்பா கோதுமை (உடைத்தது) - 1 கப்
2. பாசிப் பருப்பு - 1/4 கப்
3. வெல்லம் - 200 கிராம்
4. ஏலக்காய் பொடி - 1/4 மேசைக்கரண்டி
5. உலர் திராட்சை - 4 எண்ணம்
6. முந்திரிப்பருப்பு - 3 எண்ணம்
7. பாதாம் பருப்பு - 3 எண்ணம்
8. நெய் - 1 மேசைக்கரண்டி
9. தேங்காய்த் துருவல் - 1 மேசைக்கரண்டி
செய்முறை :
1. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் இல்லாமல் உடைத்த சம்பா கோதுமை மற்றும் பாசிப்பருப்பு இரண்டையும் பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.
2. மூன்று கப் தண்ணீர் ஊற்றி, அதில் சம்பா கோதுமை மற்றும் பாசிப்பருப்பு மற்றும் வெல்லத்தூள் சேர்த்துக் குழையும் வரை வேக விடவும்.
3. ஒரு கடாயில் நெய் ஊற்றி, சிறு நெருப்பில் பாதாம் பருப்பு, முந்திரிப் பருப்பு, உலர் திராட்சை ஆகியவற்றைப் போட்டு வதக்கவும். அதில் துருவிய தேங்காயைப் போட்டு இலேசாக வதக்கவும்.
4. அதை அப்படியே வேகவைத்திருக்கும் கோதுமைக் கலவையில் கலந்து கிளறி இறக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.