பாலக்கீரை புலாவ்
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. பாசுமதி அரிசி சாதம் - 2 கப்
2. வேகவைத்த கேரட், பட்டாணி, மக்காச்சோளம் - 1 கப்
3. பாலக்கீரை (நறுக்கியது) - 1 கப்
4. மிளகாய்த்தூள் - 1/4 தேக்கரண்டி
5. வெங்காயம் (நறுக்கியது) - 1 கப்
6. பூண்டு - 8 பற்கள்
7. பச்சை மிளகாய் - 1 எண்ணம் (சிறிதாக நறுக்கி வைக்கவும்)
8. முந்திரிப்பருப்பு - 1 தேக்கரண்டி
9. சீரகம் - 1 தேக்கரண்டி
10. நெய் - 1 தேக்கரண்டி
11. மல்லித்தழை - சிறிதளவு
12. உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
1. வாணலியில் நெய் விட்டு, முந்திரியை வறுத்து, சீரகம் சேர்த்துத் தாளிக்கவும்.
2. வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், கீரையைச் சேர்த்து வதக்கவும்.
3. அதனுடன் உப்பு, மிளகாய்த்தூள், பட்டாணி, மக்காச்சோளம், கேரட் சேர்த்து வதக்கி, சாதத்தைச் சேர்த்து முள்கரண்டியால் கிளறவும்.
4. கடைசியாகக் மல்லித்தழையைத் தூவிப் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.