ஐயங்கார் புளியோதரை
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. அரிசி – 200 கிராம்
2. புளி – பெரிய எலுமிச்சை அளவு
3. காய்ந்த மிளகாய் – 3 எண்ணம்
3. மல்லித்தூள் – 1 தேக்கரண்டி
4. வெந்தயம் – 1 /4 தேக்கரண்டி
5. மிளகு – 1 /2 தேக்கரண்டி
6. மஞ்சள்தூள் – 1 /4 தேக்கரண்டி
7. நல்லெண்ணெய் – 2 மேசைக்கரண்டி
8. பெருங்காயம் – சிறிது
9. கருவேப்பிலை – சிறிது
10. உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை :
1. அரிசியை வேக வைத்து ஆற வைக்கவும்.
2. இரண்டு கப் தண்ணீர் விட்டு, அதில் புளியை ஊற வைத்துப் பின் சாறு எடுத்து வடிகட்டவும்.
3. ஒரு வாணலியில் நல்லெண்ணெய்யைக் காய வைத்து, அதில் மிளகாய் வற்றலைக் கிள்ளிப் போடவும்.
4. பிறகு அதில் மஞ்சள்தூள், பெருங்காயம், புளிச்சாறு சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.
5. புளிச்சாறு அளவில் குறைந்து கெட்டியானதும், அதில் பொடித்த மிளகு, உப்பு சேர்க்கவும்.
6. இந்தக் கலவையைக் கீழே இறக்கி ஆற வைக்கவும்.
7. வெந்தயத்தையும், மல்லியையும் சிறிது எண்ணெய்யில் வறுத்துப் பொடியாக்கிக் கொள்ளவும்.
8. அனைத்தையும் சாதத்தோடு சேர்த்து நன்றாகக் கிளறி விடவும்.
9. கடைசியாக சிறிது எண்ணெய்யைச் சூடாக்கிக் கறிவேப்பிலை போட்டு இலேசாக வதக்கி அதைச் சாதத்தில் சேர்த்து கலக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.