ரவா பொங்கல்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. ரவை - 1 கப்
2. மிளகு (ஒன்றிரண்டாக உடைத்தது) - 1/2 தேக்கரண்டி
3. சீரகம் - 1/2 தேக்கரண்டி
4. முந்திரிப் பருப்பு (உடைத்தது) - 1 மேசைக்கரண்டி
5. நெய் - சிறிது
6. கறிவேப்பிலை - சிறிது
7. பெருங்காயத்தூள் - சிறிது
8. உப்பு - தேவையான அளவு
செய்முறை :
1. வாணலியில் முதலில் ரவையைப் போட்டுச் சிறிது சிவக்க வறுத்து வைக்கவும்.
2. வாணலியை அடுப்பில் வைத்து, நெய் விட்டு மிளகு சீரகம், முந்திரி போட்டு வறுக்கவும்.
3. அத்துடன் ரவை சேர்த்து, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போடவும்.
4. ரவை நன்கு பொரிந்ததும் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
5. ரவை நன்கு வெந்ததும் இறக்கிப் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.