அவல் சர்க்கரைப் பொங்கல்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. அவல் – 100 கிராம்
2. உருண்டை வெல்லம் – 150 கிராம்
3. பாசிப்பருப்பு – 50 கிராம்
4. தேங்காய்த் துருவல் – 50 கிராம்
5. முந்திரிப்பருப்பு - 8 எண்ணம்
6. உலர் திராட்சை (கிஸ்மிஸ்) - 10 எண்ணம்
7. ஏலக்காய் – 4 எண்ணம்
8. நெய் – தேவையான அளவு
செய்முறை :
1. ஒரு பாத்திரத்தில் பாசிப்பருப்பை வேக வைத்து வைக்கவும்.
2. ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைத் தூள் செய்து போட்டு, அதில் தண்ணீர் சேர்த்து வெல்லப் பாகு தயாரித்து வைத்துக் கொள்ளவும்.
2. ஒரு கடாயில் நெய் சேர்த்து முந்திரி, திராட்சை, ஏலக்காய் மூன்றையும் வறுத்து எடுத்து வைக்கவும்.
3. கடாயில் மீண்டும் நெய் சேர்த்து அதனுடன் அவலைச் சேர்த்து அதன் நிறம் லேசாக மாறும் வரை நன்கு கிளறவும்.
4. அதன் பின்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துச் சிறிது நேரம் அவலை வேக வைக்கவும்.
5. வேகவைத்து வைத்திருக்கும் பாசிப் பருப்பைச் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
6. அதனுடன் வெல்லப்ப்பாகைச் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
7. கடைசியாக நெய்யில் வறுத்து வைத்திருக்கும் முந்திரிப்பருப்பு, உலர் திராட்சை, ஏலக்காய் சேர்த்துக் கிளறி விட்டு, அடுத்ததாக சிறிதளவு நெய் சேர்த்து இறக்கி விடவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.