கருப்பட்டிப் பொங்கல்
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. கருப்பட்டித் தூள் - 1 கப்
2. அரிசி - 1 கப்
3. பால் - 3 கப்
4. தண்ணீர் - 3 கப்
5. நெய் - ¼ கப்
6. ஏலக்காய் பொடி - ¼ கப்
7. முந்திரிப்பருப்பு - 4 எண்ணம்
8. உலர் திராட்சை - 1 தேக்கரண்டி
9. பாதாம்பருப்பு - 4 எண்ணம்
10. பிஸ்தா - 1 தேக்கரண்டி
செய்முறை :
1. முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர், இரண்டு கப் பால் மற்றும் அரிசி சேர்த்து நன்றாக வேக விடவும்.
2. இன்னொரு பாத்திரத்தில் கருப்பட்டித் தூள் சேர்த்து கால் கப் தண்ணீர் சேர்த்து நெருப்பைக் குறைவாக வைத்துக் கம்பி பாகு போல் காய்ச்சவும்.
3. பாத்திரத்தில் வேக வைத்த அரிசியை அடிக்கடிக் கிளறி விடவும்.
4. பாலும் தண்ணீரும் வற்றியவுடன் காய்ச்சிய பாகைச் சேர்த்து நன்கு கிளறவும்.
5. கொதிக்க ஆரம்பிக்கும் போது, எடுத்து வைத்துள்ள நெய்யைப் பாதிப் பாதியாகச் சேர்த்துக் கிளறவும்.
6. எல்லாம் நன்றாகச் சேர்ந்து பொங்கல் பதம் வந்ததும் இறக்கி வைக்கவும்.
7. முந்திரி திராட்சையைச் சேர்த்து கிளறவும்.
8. பாதாம் மற்றும் பிஸ்தாவைத் துருவிச் சேர்க்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.