முருங்கைப்பூ சாதம்
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. பாசுமதி அரிசி - 3 கப்
2. முருங்கைப்பூ- 2 கப்
3. வெங்காயம் - 3 எண்ணம்
4. குடைமிளகாய் - 2 எண்ணம்
5. பச்சை மிளகாய் - 4 எண்ணம்
6. மிளகுத் தூள் - 2 தேக்கரண்டி
7. மல்லித்தழை - சிறிது
8. எண்ணெய் - தேவையான அளவு
9. உப்பு - தேவையான அளவு
செய்முறை :
1. முதலில் பாசுமதி அரிசியை ஊறவைத்து, பின்பு பாசுமதி அரிசியை சுத்தமாகக் கழுவி, வேகவைத்துக் கொள்ளவும்.
2. வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கி வைக்கவும்.
3. குடைமிளகாயை மெல்லியதாக சீவி வைத்துக் கொள்ளவும்.
4. முருங்கைப்பூ வை இட்லி தட்டில் வைத்து அரை பதத்துக்கு வேகவைக்கவும்.
5. ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
6. அதனுடன் சாதம், முருங்கைப்பூ சேர்த்து நன்றாகக் கிளறி விடவும்.
7. அதில் மெல்லியதாக சீவி வைத்துள்ள குடைமிளகாய், நறுக்கிய மல்லித்தழை, உப்பு, மிளகுத் தூள் போட்டுக் நன்கு கிளறி பரிமாறலாம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.