ஆந்திரா புளியோதரை
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. உதிரியாக வடித்த சாதம் - 2 கப்
2. பச்சை மிளகாய் -2 எண்ணம்
3. கறிவேப்பிலை - சிறிது
4. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
5. நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
6. கடுகு - 1 தேக்கரண்டி
7. உளுந்து - 1தேக்கரண்டி
8. கடலைப் பருப்பு - 2 தேக்கரண்டி
9. மிளகாய் வற்றல் - 4 எண்ணம்
10. பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
11. புளி - தேவையான அளவு
12. உப்பு - தேவையான அளவு
செய்முறை :
1. அரிசியை வேகவைத்துச் சாதம் சூடாக இருக்கும் போதே ஒரு பாத்திரத்தில் குவியலாக வைத்து நடுவில் குழிவாக்கவும்.
2. பச்சை மிளகாயைக் கீறி கறிவேப்பிலை, மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஆகியவற்றைப் போட்டு மூடி வையுங்கள்.
3. புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வையுங்கள்.
4. வாணலியில் மீதமுள்ள எண்ணெயைக் காய வைத்துக் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம் போன்றவற்றை சிவக்க வறுக்கவும்.
5. அதில் புளிக் கரைசலை ஊற்றி, உப்பு சேர்த்துப் பச்சை வாடை போகக் கொதிக்க வைக்கவும்.
6. இந்தப் புளிக்கலவையைச் சாதத்தில் சேர்த்துக் கிளறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.