கேழ்வரகுக் கூழ்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. கேழ்வரகு மாவு - 1 கப்
2. உப்பு -தேவையான அளவு
செய்முறை :
1.ஒரு பாத்திரத்தில் ஒரு பங்கு மாவுக்கு நான்கு பங்கு தண்ணீர் எடுத்துக் கொண்டு மூடி அடுப்பில் வைத்துச் சூடுபடுத்தவும்.
2. கேழ்வரகு மாவில் கொஞ்சம் தண்ணீர் விட்டுத் தோசை மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும்.
3. தண்ணீர் கொதி வந்ததும் மாவைக் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு கையால் ஊற்றிக் கொண்டே, மற்றொரு கையில் கரண்டியால் கட்டி தட்டாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.
4. பின்னர் சிறிது நேரம் மூடி வைத்திருக்கவும். இடையிடையே திறந்து, கட்டியாகிவிடாமல் கிளறி விடவும்.
5. மாவின் நிறம் மாறி மாவு வெந்த வாசம் வந்ததும் உப்பு சேர்த்துக் கிளறிச் சிறிது நேரத்தில் இறக்கவும்.
6. கேழ்வரகுக் கூழினை ஆற வைத்துத் தேவைக்கேற்பத் தண்ணீர் சேர்த்துப் பருகலாம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.