வெண் பொங்கல்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. பச்சரிசி - 250 கிராம்
2. பாசி பருப்பு - 125 கிராம்
3. சீரகம் - 1/2 தேக்கரண்டி
4. வெங்காயம் -10 எண்ணம்
5. மிளகு - 1/2 தேக்கரண்டி
6. மிளகாய் வற்றல் - 8 எண்ணம்
7. கறிவேப்பிலை - சிறிது
8. எண்ணெய் - தேவையான அளவு
9. நெய் - தேவையான அளவு
9. முந்திரி – 10 எண்ணம்
10. உப்பு- தேவையான அளவு
செய்முறை :
1. பாசிப்பருப்பை தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
2. அரிசியை நன்கு களைந்து, 2 கிண்ணம் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து உதிரியாக வேக வைத்துக் கொள்ளவும்.
3. சாதத்தை ஒரு பாத்திரத்தில் பரப்பி ஆற வைக்கவும்.
4. பாசிப்பருப்பைத் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்து தண்ணீர் வடித்துத் தனியே எடுத்து வைக்கவும்.
5. வானலியில் கொஞ்சம் நெய் விட்டு முந்திரியை வறுத்துத் தனியாக வைக்கவும்.
6. அடுத்து வானலியில் எண்ணெய் விட்டு மிளகு, சீரகம், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், வற்றல் தாளித்துக் கொள்ளவும்.
7. ஆற வைத்த சாதத்துடன், வேக வைத்த பாசிப்பருப்பு மற்றும் தாளிசத்தைச் சேர்த்துக் கிளறவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.