பேரீட்சை பொங்கல்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. பச்சரிசி – 250 கிராம்
2. வெல்லம் – 200 கிராம்
3. பாசிப்பருப்பு – 150 கிராம்
4. ஏலக்காய் – 4 எண்ணம்
5. பேரீட்சை – 7 எண்ணம்
6. நெய் – 50 கிராம்
7. தேங்காய் – 1/2 மூடி
8. உப்பு – தேவையான அளவு
செய்முறை :
1. தேங்காய், பேரீட்சையினைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
2. வெல்லத்தைச் சிறிது தண்ணீர் சேர்த்துச் சூடு செய்து கரைத்து வடிகட்டி வைக்கவும்.
3. அரிசி, பாசிப் பருப்பு இரண்டையும் சிறிது உப்பு சேர்த்துக் குக்கரில் குழைய வேக வைக்கவும்.
4. வேக வைத்த அரிசி பருப்புடன் கரைத்த வெல்லத்தை ஊற்றிக் கிளறவும்.
5. அதன் பின்பு, அதில் பேரீட்சையைப் போட்டு சிறுதீயில் அடிப்பிடித்து விடாமல் கிளறவும்.
6. அதில் ஏலக்காய் பொடித்துப் போட்டுக் கிளறவும்.
7. ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் நறுக்கிய தேங்காயை போட்டு நன்கு சிவக்க வறுக்கவும்.
8. வறுத்ததை அடுப்பில் இருக்கும் பொங்கலில் சேர்த்துக் கிளறவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.