சர்க்கரைப் பொங்கல்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. பச்சரிசி – 200 கிராம்
2. பாசிப்பருப்பு – 75 கிராம்
3. வெல்லம் - 1 1/2 கப்
4. பால் – 250 மி.லி
5. ஏலக்காய் பொடி - 1/2 தேக்கரண்டி
6. பச்சை கற்பூரம் - 1 சிட்டிகை
7. நெய் - 1/2 கப்
8. முந்திரிப் பருப்பு - 1/4 கப்
9. உலர்ந்த திராட்சை - 20 எண்ணம்
10. உப்பு - தேவையான அளவு
செய்முறை :
1. ஒரு பாத்திரத்தில் பச்சரிசி எடுத்து அலசி விட்டு, 10 நிமிடம் ஊற வைக்கவும்.
2. ஒரு பானில் 1/2 கப் பாசிப்பருப்பு சேர்த்து நான்கு நிமிடங்கள் வரை வறுக்கவும்.
3. வறுத்த பாசிப்பருப்பைத் தண்ணீரில் ஒரு முறை கழுவித் தனியாக வைக்கவும்.
4. ஒரு பிரஷர் குக்கரில் 3 கப் தண்ணீர் மற்றும் பால் சேர்த்துச் சூடாக்கவும்.
5. பால் இலேசாகப் பொங்கி வரும் பொழுது, பாசிப்பருப்பு, ஊற வைத்து தண்ணீர் வடித்து வைத்துள்ள அரிசியைச் சேர்க்கவும்.
6. நன்கு கலந்த பின்னர் குக்கரை மூடி 6 விசில் வைக்கவும்.
7. ஒரு பாத்திரத்தில் 1.5 கப் வெல்லம் மற்றும் அரை கப் தண்ணீர் சேர்த்துக் கலக்கவும்.
8. வெல்லம் நன்கு கரைந்த பின்னர், வெல்லத்தைச் சில நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் கொதிக்க வைக்கவும். பின்னர் அதனைத் தனியே எடுத்து வைக்கவும்.
9. பிரஷர் அடங்கிய பிறகு குக்கரை திறந்து ஒரு கரண்டி கொண்டு மசித்து விடவும்.
10. வெல்லப் பாகை வடிகட்டி அதனுடன் சேர்த்துக் கொள்ளவும்.
11. அதனுடன் ஒரு சிட்டிகை உப்பு, இரண்டு மேஜைக்கரண்டி நெய் சேர்த்துக் கலக்கவும்.
12. ஒரு சிறிய கடாயில் 2 மேஜைக்கரண்டி நெய் சேர்த்துக் காய்ந்ததும், முந்திரிப்பருப்பு சேர்த்துப் பொன்னிறமாக வறுக்கவும்.
13. அதனுடன் 20 உலர்ந்த திராட்சை சேர்த்து உப்பி வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
14. வறுத்து வைத்துள்ள முந்திரி திராட்சையினைச் சர்க்கரைப் பொங்கலில் சேர்த்துக் கலக்கவும்.
15. அதனுடன் அரை தேக்கரண்டி ஏலக்காய் பொடி மற்றும் 2 மேஜைக்கரண்டி நெய் சேர்த்து கலக்கவும்.
16. கடைசியாக ஒரு சிட்டிகை பச்சை கற்பூரம் சேர்த்து கிளறிப் பின்னர் பரிமாறலாம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.