மாங்காய் நிலக்கடலை சாதம்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. மாங்காய் (பெரியது) – 1 எண்ணம்
2. நிலக்கடலை – 100 கிராம்
3. சின்ன வெங்காயம் – 10 எண்ணம்
4. வெந்தயம் - சிறிது
5. மிளகாய் பொடி – 1 தேக்கரண்டி
6. மஞ்சள் பொடி - 1/4 தேக்கரண்டி
7. நல்லெண்ணெய் – தேவையான அளவு
8. உப்பு - தேவையான அளவு
9. கறிவேப்பிலை - சிறிது
10. மல்லித்தழை - சிறிது
11. வடித்த சாதம் – 2 கப்
செய்முறை :
1. மாங்காயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும் அல்லது துருவிக் கொள்ளவும்.
2. வாணலியை அடுப்பில் வைத்து சிறிது வெந்தயம், கடுகு, நிலக்கடலை சின்ன வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.
3. அதில் மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, சேர்த்து நன்றாக வதக்கவும்.
4. நன்கு வதங்கியவுடன் மாங்காயைச் சேர்த்து வதக்கவும்.
5. அனைத்தும் எண்ணெய்யில் ஒன்று சேர்ந்து கலந்தவுடன் வடித்து எடுக்கப்பட்டுள்ள சாதத்தை (உதிரியாக) சேர்த்துக் கிளறவும்.
6. மேலே மல்லித்தழை, கறிவேப்பிலை தூவி அலங்கரிக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.