புளிச்ச கீரை சாதம்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. அவல் – 1/2 கப்
2. பாசிப்பருப்பு – 1/4 கப்
3. பெருங்காயத்தூள் – சிறிதளவு
4. எண்ணெய் - தேவையான அளவு
5. நெய் – தேவையான அளவு
6. மிளகு - 1/2 தேக்கரண்டி
7. சீரகம் – 1/2 தேக்கரண்டி
8. பச்சை மிளகாய் – 2 எண்ணம்
9. இஞ்சி – 1 துண்டு
10. கறிவேப்பிலை - சிறிது
11. மல்லித்தழை - சிறிது
12. உப்பு- தேவையான அளவு
செய்முறை :
1. பச்சை மிளகாய், இஞ்சி, மல்லித்தழையைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
2. குக்கரில் பாசிப்பருப்பை உதிரியாக வேக வைத்துக் கொள்ளவும்.
3. வாணலியில் நெய் ஊற்றி அது உருகியதும், மிளகு, சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு வதக்கிப் பின்னர் அதனுடன் அவலைக் கொட்டிக் கிளறவும்.
4. அதனுடன் வேக வைத்த பாசிப்பருப்பு, பெருங்காயத்தூள், உப்பு தேவையான தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
5. பொங்கல் பதத்துக்கு வந்ததும், மல்லித்தழையைத் தூவி இறக்கிப் பரிமாறலாம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.