தேங்காய்ப் பால் பிரியாணி
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. பாஸ்மதி அரிசி – 1 கப்
2. தேங்காய்ப் பால் – 1 கப்
3. காய்கறிகள் (கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், பச்சை பட்டாணி) – 1 கப்
4. வெங்காயம் – 2 எண்ணம்
5. பச்சை மிளகாய் – 2 எண்ணம்
6. புதினா, மல்லித்தழை – 2 மேஜைக்கரண்டி
7. சிவப்பு மிளகாய் – 1/2 தேக்கரண்டி
8. கரம் மசாலா பவுடர் – 1/2 தேக்கரண்டி
9. மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
10. ஏலக்காய் – 2 எண்ணம்
11. இலவங்கப்பட்டை – சிறிய துண்டு
12. கிராம்பு – 2 எண்ணம்
13. பிரியாணி இலை – 1 எண்ணம்
14. எண்ணெய் / நெய் – 1 மேசைக்கரண்டி
15. உப்பு – தேவையான அளவு
செய்முறை :
1. பாசுமதி அரிசியைக் குறைந்தது 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஊற வைத்து, பிறகு, தண்ணீரை வடித்துவிட்டு 1/4 தேக்கரண்டி நெய் சேர்த்து ஒரு கடாயில் வறுக்கவும்.
2. அடி கனமான பாத்திரத்திலோ, குக்கரிலோ, நெய் / எண்ணெய் சேர்க்கவும். ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை, இலவங்கப்பட்டை, பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றை வரிசையாகச் சேர்க்கவும்.
3. வெங்காயம் வதங்கியதும், வெட்டிய காய்கறிகள் சேர்த்து, அதற்க்குத் தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.
4. அதனுடன் மல்லித்தழை, புதினா மற்றும் சிவப்பு மிளகாய் பொடி, கரம் மசாலாப் பொடி, மஞ்சள் பொடி சேர்த்துக் கிளறிவிடவும்.
5. அதனுடன் தண்ணீர், தேங்காய் பால், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
6. பாஸ்மதி அரிசி சேர்த்து, கொதிக்கும் பொழுது, அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து, 15 நிமிடங்கள் வரை வேக வைத்து இறக்கவும் (மிதமான தீயில் 2 விசில்களும் வைக்கலாம்)
குறிப்பு:
* வெங்காயத் தயிர் பச்சடி சிறப்பான துணை உணவாக இருக்கும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.