கத்தரிக்காய் மொச்சை சாதம்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. வடித்த சாதம் (உதிராக) - 2 கப்
2. கத்தரிக்காய் - 6 எண்ணம்
3. காய்ந்த மொச்சை - 1/4 கப்
4. பெரிய வெங்காயம் - 2 எண்ணம்
5. தக்காளி - 3 எண்ணம்
6. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
7. பிரிஞ்சி இலை - 2 எண்ணம்
8. உப்பு - தேவையான அளவு
9. எண்ணெய் - தேவையான அளவு
அரைக்க
10. தேங்காய்த் துருவல் - 2 மேசைக்கரண்டி
11. மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
12. மல்லித்தூள் - 1/2 தேக்கரண்டி
13. இஞ்சி - 1 துண்டு
14. பூண்டு - 3 பல்
15. சோம்பு - 1/2 தேக்கரண்டி
செய்முறை :
1. மொச்சைக் கொட்டையை முதல் நாள் இரவில் ஊற வைத்து, மறுநாள் சிறிதளவு உப்பு சேர்த்து வேக வையுங்கள்.
2. கத்தரிக்காய், வெங்காயம், தக்காளி ஆகியவற்றை மெல்லியதாக நறுக்குங்கள்.
3. அரைக்கக் கொடுத்திருப்பதைச் சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்தெடுங்கள்.
4. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில், பிரிஞ்சி இலையைத் தாளித்து வெங்காயம், கத்தரிக்காய், மஞ்சள் தூள் சேர்த்து வதக்குங்கள்.
5. காய் முக்கால் பதம் வெந்ததும், தக்காளி, அரைத்த விழுது, மொச்சைக் கொட்டை, தேவையான உப்பு சேர்த்து சுருளக் கிளறி இறக்குங்கள்.
6. இந்த விழுதைச் சாதத்துடன் சேர்த்துக் கலக்குங்கள், பரிமாறுங்கள்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.