பட்டாணி சாதம்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. அரிசி – 2 கப்
2. பச்சைப் பட்டாணி – 1 கப்
3. கேரட் – 1 எண்ணம்
4. சின்ன வெங்காயம் – 100 கிராம்
5. பெரிய வெங்காயம் – 2 எண்ணம்
6. தக்காளி – 2 எண்ணம்
7. பச்சை மிளகாய் – 10 எண்ணம்
8. நெய் – 100 கிராம்
9. பட்டை – 2 துண்டு
10. கிராம்பு – 4 எண்ணம்
11. சோம்பு – 1/2 தேக்கரண்டி
12. கசகசா – 1/2 தேக்கரண்டி
13. பிரிஞ்சி இலை – 1 எண்ணம்
14. ஏலக்காய் – 3 எண்ணம்
15. இஞ்சி – சிறிய நெல்லிக்காய் அளவு
16. பூண்டு – 100 கிராம்
17. மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
18. மல்லித்தூள் – 1 1/2 தேக்கரண்டி
19. கடுகு – 1/2 தேக்கரண்டி
20. உப்பு – தேவையான அளவு
21. எண்ணைய் – தேவையான அளவு
22. கறிவேப்பிலை – சிறிது
23. மல்லித்தழை - சிறிது
செய்முறை :
1. சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், பட்டை, கிராம்பு, சோம்பு, கசகசா ஆகியவற்றை சிறிது தண்ணிர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
2. அடுப்பில் குக்கரை வைத்து அதில், நெய், எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, பிரியாணி இலை, ஏலக்காய், கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
3. தாளிசத்துடன் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
4. பின்னர் அதனுடன் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
5. அதனுடன் பச்சைப் பட்டாணி, கேரட், சேர்த்து நன்கு வதக்கவும்.
6. அதனுடன் அரைத்த மசாலா, மஞ்சள்தூள், மல்லித்தூள், உப்பு போட்டு நன்கு வதக்கவும்.
7. அதன் பின்பு, அரிசியைச் சேர்த்து, ஒரு கிளறு கிளறிய பிறகு இரண்டு கப் அரிசிக்கு 4 கப் தண்ணீர் ஊற்றி ஒரு கொதி வந்ததும் மேலாக சிறிது நெய் விட்டு குக்கரை மூடி 4 விசில் வரும் வரை வேகவிடவும்.
8. பின்னர், சிறிது நேரம் கழித்து இறக்கி, அரிசி உடையாமல் நன்கு கிளறிவிடவும்.
9. பின்னர் அதன் மேலாக, மல்லித்தழை தூவி சூடாகப் பறிமாறலாம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.