வெஜ் சாமைப் பிரியாணி
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. சாமை அரிசி – 500 கிராம்
2. வெங்காயம் - 100 கிராம்
3. தக்காளி - 100 கிராம்
4. கேரட் - 100 கிராம்
5. பீன்ஸ் - 100 கிராம்
6. சௌசௌ – 100 கிராம்
7. பச்சைப்பட்டாணி – 50 கிராம்
8. தயிர் – 1/2 கோப்பை
9. இஞ்சி, பூண்டு விழுது – தேவையான அளவு
10. புதினா - தேவையான அளவு
11. சோம்பு - 1 தேக்கரண்டி
12. பட்டை – சிறிது
13. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
14. உப்பு – தேவையான அளவு.
தாளிக்க:
15. நெய் – 100 மி. கி,
16. ஏலக்காய் - 2 எண்ணம்
17. பிரிஞ்சி இலை - 1 எண்ணம்
18. கிராம்பு – 2 எண்ணம்
19. பட்டை - சிறிது
20. சாதிபத்திரி – சிறிது.
செய்முறை :
1. சோம்பு, பட்டையைப் பொடி செய்து கொள்ளவும்.
2. காய்கறிகளை நறுக்கி வைக்கவும்.
3. நெய்யைச் சூடாக்கி, தாளிக்கக் கொடுத்த பொருட்களை, சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
4. அதில், சோம்பு பட்டை பொடி, இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.
5. பின்னர் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கி, புதினாவைச் சேர்க்கவும்.
6. அவை நன்றாக வதங்கியதும், தக்காளி சேர்த்து நன்கு சுருண்டு வரும் வரை வதக்கவும்.
7. நறுக்கிய காய்கறிகள், பச்சைப்பட்டாணி சேர்த்து மிளகாய்த் தூள், உப்புடன் 5 டம்ளர் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
8. பாதி வெந்ததும் தயிர் சேர்த்து வேகவிடவும்.
9. அதனுடன் சாமை அரிசியைச் சேர்த்து வேகவிடவும்.
10. பிரியாணி பதம் வந்ததும் இறக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.