கறிவேப்பிலை சாதம்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. உதிராக வடித்த சாதம் - 2 கப்
2. கடுகு - 1/2 தேக்கரண்டி
3. உளுந்து - 1/2 தேக்கரண்டி
4. கடலைப் பருப்பு - 2
5. எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
6. நெய் - 2 மேசைக்கரண்டி
7. உப்பு - தேவையான அளவு
பொடிக்க:
8. மிளகு - 1 தேக்கரண்டி
9. கசகசா - 1 தேக்கரண்டி
10. சீரகம் - 2 தேக்கரண்டி
11. முந்திரிப்பருப்பு - 4 எண்ணம்
12. கறிவேப்பிலை - சிறிது
13. தேங்காய்த் துருவல் - 2 மேசைக்கரண்டி
14. மிளகாய் வற்றல் - 6 எண்ணம்
செய்முறை :
1. கறிவேப்பிலையைச் சுத்தம் செய்து வெறும் வாணலியில் சிறிது சிறிதாகப் போட்டு வறுத்தெடுங்கள்.
2. பிறகு மிளகு, சீரகம், கசகசா, மிளகாய் வற்றல், முந்திரி, தேங்காய்த் துருவல் ஆகியவற்றை வறுத்தெடுத்து ஆற வைக்கவும்.
3. கறிவேப்பிலை உட்பட வறுத்த பொருட்கள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துப் பொடித்து வையுங்கள்.
4. எண்ணெய் மற்றும் நெய்யைக் காய வைத்து கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு ஆகியவற்றைத் தாளிக்கவும்.
5. சாதத்தில், பொடித்த பொடி, உப்பு, தாளிசக் கலவை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் கலக்குங்கள்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.