காளான் பிரியாணி
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. காளான் - 250 கிராம்
2. பிரியாணி அரிசி - 500 கிராம்
3. வெங்காயம் - 2 எண்ணம்
4. தக்காளி - 3 எண்ணம்
5. பச்சை மிளகாய் - 5 எண்ணம்
6. இஞ்சி பூண்டு விழுது - 50 கிராம்
7. கொத்தமல்லி - சிறிது
8. புதினா - சிறிது
9. தயிர் - 1 கோப்பை
10. மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி
11. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
12. கரம் மசாலா - 1 தேக்கரண்டி
13. பட்டை கிராம்பு ஏலக்காய் பொடி - ½ தேக்கரண்டி
14. எண்ணெய் - 100 மில்லி
15. நெய் - 20 கிராம்
செய்முறை :
1. காளானை வெதுவெதுப்பான நீரில் சிறிது நேரம் போட்டு வைத்துச் சுத்தம் செய்து வைக்கவும்.
2. அரிசியைக் கழுவிச் சுத்தம் செய்து வைக்கவும்.
3. குக்கரில் எண்ணெய்,நெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.
4. பின்பு அதில் பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்க்கவும்.
5. அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்பு மசாலா பொருட்கள் அனைத்தும் சேர்த்து வதக்கவும்.
6. பிறகு தக்காளியும் சேர்த்து வதக்கி, அதில் வெட்டி வைத்த காளான், பின்பு தயிர் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
7. காளான் தண்ணீர் விட ஆரம்பித்ததும், அதில் பச்சை மிளகாய், மல்லி, புதினா தூவிக் கிளறவும்.
8. தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, ஊற வைத்த அரிசியை போட்டு 2 விசில் விட்டு இறக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.