காளான் சாதம்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. உதிராக வடித்த சாதம் 2 கோப்பை
2. காளான் - 15 எண்ணம்
3. பெரிய வெங்காயம் - 1 எண்ணம்
4. இஞ்சி - 1 துண்டு
5. பூண்டு - 6 பல்
6. வெங்காயத் தாள் - 2 எண்ணம்
7. பச்சை கலர் சில்லி சாஸ் - 1 மேசைக்கரண்டி
8. மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
9. சோயா சாஸ் - 1 தேக்கரண்டி
10. எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
11. உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
1. வெங்காயம், இஞ்சி, பூண்டு, காளான் ஆகியவற்றை நீளவாக்கில் மெல்லியதாகவும், வெங்காயத்தாளை பொடியாகவும் நறுக்கி வைக்கவும்.
2. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.
3. வெங்காயம் நிறம் மாறியதும் காளானைச் சேர்த்து மேலும் ஐந்து நிமிடங்கள் வதக்கவும்.
4. பின்னர் அதில் சில்லி சாஸ், சோயா சாஸ், மிளகுத்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து மிதமான நெருப்பில் இரண்டு நிமிடங்கள் கிளறவும்.
5. அந்தக் கலவையில் சாதம், வெங்காயத்தாள் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறிப் பரிமாறலாம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.