தேங்காய் சாதம்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. அரிசி - 250 கிராம்
2. துருவிய தேங்காய் - 2 கோப்பை
3. வெங்காயம் (நறுக்கியது) - 1 கோப்பை
4. மிளகாய் வற்றல் - 8 எண்ணம்
5. தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
6. உப்பு - தேவையான அளவு
7. கருவேப்பிலை - சிறிது
செய்முறை :
1. அரிசியை அரை மணி நேரம் நன்றாக ஊற வைத்து, பின்பு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் வெங்காயம், கருவேப்பிலை மற்றும் மிளகாய் வற்றல் உப்பு சேர்த்து, வெங்காயம் நன்றாக வதங்கும் வரை வதக்கவும்.
3. அத்துடன் தேங்காயைச் சேர்த்து ஐந்து நிமிடம் வேக விடவும்.
4. கடைசியாக சாதத்தைச் சேர்த்துக் கலக்கி நன்றாக ஐந்து நிமிடம் வேகவைத்துப் பரிமாறவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.