நெல்லிக்காய் சாதம்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. சாதம் - 2 கோப்பை
2. நெல்லிக்காய் (பெரியது) - 4 எண்ணம்
3. எலுமிச்சைச் சாறு - 1 தேக்கரண்டி
4. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
5. மிளகாய் வற்றல் - 2 எண்ணம்
6. முந்திரிப் பருப்பு - 6 எண்ணம்
7. கடுகு - 1/2 தேக்கரண்டி
8. உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
9. இஞ்சி - சிறிது
10. பூண்டு - 4 பல்
11. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
12. நல்லெண்ணெய் - தேவையான அளவு
13. கறிவேப்பிலை - சிறிது
14. மல்லித்தழை - சிறிது
15. உப்பு - தேவையானஅளவு
செய்முறை :
1. சாதத்துடன் 1 மேசைக்கரண்டி நல்லெண்ணெய், உப்பு சேர்த்து ஆற விடவும்.
2. நெல்லிக்காயை விதை நீக்கிச் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி, உப்பு சிறிது சேர்த்து வைக்கவும்.
3. ஒரு வாணலியில் எண்ணை ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, முந்திரிப் பருப்பு சேர்த்துச் சிவக்க வதக்கவும்.
4. இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி நெல்லிக்காய்ச் சாறு சேர்த்து கலந்து விடவும்.
5. மஞ்சள்தூள் சேர்த்து ஒரு நிமிடம் வேக விடவும்.
6. அதன் பிறகு, அக்கலவையைச் சாதத்தில் சேர்த்துக் கிளறி, எலுமிச்சைச் சாறு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, மல்லித்தழை தூவி இறக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.