தக்காளி சாதம்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. அரிசி - 500 கிராம்
2. தக்காளி - 1/2 கிலோ
3. பெரிய வெங்காயம் - 1 எண்ணம்
4. இஞ்சிப் பூண்டு விழுது - 2 மேசைக்கரண்டி
5. பீன்ஸ் - 4 எண்ணம்
6. பச்சை மிளகாய் - 2
7. மிளகாய்த்தூள் - 1 1/2 மேசைக்கரண்டி
8. சோம்பு - 1 தேக்கரண்டி
9. தேங்காய் பால் - 100 மி.லி.
10. காரட் - 1 எண்ணம்
11. கரம் மசாலாத் தூள் - 1 தேக்கரண்டி
12. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
13. கல் உப்பு - 1 1/2 மேசைக்கரண்டி
14. நல்லெண்ணெய் - 3 மேசைக்கரண்டி
15. கறிவேப்பிலை - சிறிது
16. மல்லித்தழை - சிறிது
17. உப்பு - தேவையான அளவு
செய்முறை :
1. பீன்ஸை துண்டுகளாக நறுக்கவும். தக்காளி, காரட் இரண்டையும் சிறிய துண்டுகளாக நறுக்கவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
2. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் சோம்பு, கரம் மசாலாத்தூள் போடவும்.
3. அத்துடன் நறுக்கின வெங்காயம், பீன்ஸ், போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சிப் பூண்டு விழுது சேர்த்து வாசனை போகும் வரை வதக்கவும்.
4. அதில் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், தக்காளி போட்டு வதக்கவும். தக்காளியை மசித்து விடவும்.
5. அதில் 5 கப் தண்ணீர் மற்றும் 1/4 கப் தேங்காய்ப் பால் ஊற்றி வேக விடவும். உப்பு சேர்க்கவும்.
6. தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் அரிசியைக் களைந்து போடவும்.
7. அரிசி வெந்ததும், நல்லெண்ணெய் (நெய் விரும்பினால் சேர்க்கலாம்) சேர்த்துக் கிளறவும். சாதம் குழைந்து போய்விடாமல் பார்த்து இறக்கவும்.
8. சாதத்தின் மேல் மல்லித்தழை தூவி விடவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.