சாம்பார் சாதம்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. அரிசி - 1 கோப்பை
2. துவரம்பருப்பு - 1/4 கோப்பை
3. கேரட் - 1எண்ணம்
4. பீன்ஸ் - 5 எண்ணம்
5. உருளைக்கிழங்கு - 2 எண்ணம்
6. பச்சை பட்டாணி - 50 கிராம்
7. சின்ன வெங்காயம் - 1/2 கோப்பை
8. பெரிய தக்காளி - 1 எண்ணம்
9. பச்சை மிளகாய் - 1 எண்ணம்
10. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
11. மல்லித்தூள் - 1/4 தேக்கரண்டி
12. புளித்தண்ணீர் - தேவையான அளவு
13. கருவேப்பிலை - சிறிது
14. பெருங்காயம் - சிறிது
15. எண்ணெய் - தேவையான அளவு
16. உப்பு - தேவையான அளவு
செய்முறை :
1. குக்கரில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கருவேப்பிலை, பச்சை மிளகாய், பெருங்காயம் போட்டுத் தாளிக்கவும்.
2. தாளிசத்துடன் வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
3. அத்துடன் காய்களைச் சேர்த்து வதக்கவும்.
4. காய்கறிக் கலவையோடு தண்ணீர், புளித்தண்ணீர் சேர்த்துக் கொதித்தவுடன் உப்பு, மிளகாய்த்தூள், மல்லித்தூள், அரிசி, பருப்பு இவற்றை சேர்த்து 4 விசில் விட்டு அடுப்பிலிருந்து இறக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.