கவுனி அரிசிக் கஞ்சி
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. கவுனி அரிசி - 1/2 கப்
2. பால் - 1 கப்
3. உப்பு - தேவையன அளவு
செய்முறை :
1. கவுனி அரிசியை நன்றாகக் கழுவி 2 கப் தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
2. ஊற வைத்த கவுனி அரிசித் தண்ணீரைத் தனியாக எடுத்து வைக்கவும்.
3. தண்ணீர் வடித்த பின்பு கவுனி அரிசியை மட்டும் மிக்சியில் போட்டு மாவாக அரைத்துக் கொள்ளவும்.
4. அரைத்த மாவை அடி கனமான பாத்திரத்தில் சேர்த்து, அதனுடன் ஊற வைத்துத் தனியாக வைத்த தண்ணீரைச் சேர்த்து நன்றாகக் கரைத்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
5. அடுப்பிலிருக்கும் மாவைக் கை விடாமல் கிளற வேண்டும்.
6. கலவை நன்றாக வெந்து கட்டியான பதம் வரும் போது, பாலைச் சேர்க்கவும்.
7. பால் சேர்த்து கட்டியான பதம் வந்ததும் இறக்கி, அதில் தேவையான உப்பு சேர்த்து கலந்து பரிமாறவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.