வரகரிசிக் கஞ்சி
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. வரகரிசி (வேக வைத்தது) - 1 கிண்ணம்
2. காய்ச்சிய பால் - 1 கிண்ணம்
3. சர்க்கரை - 3 மேசைக்கரண்டி
4. நெய் - 2 தேக்கரண்டி
5. பாதாம் பருப்பு - 12 எண்ணம்
6. உலர் திராட்சை - 10 எண்ணம்
செய்முறை :
1. ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் பாதாம் பருப்பு, உலர் திராட்சைகளைப் போட்டு வறுத்து எடுத்து வைக்கவும்.
2. அதே பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து, அதனுடன் வேகவைத்த வரகரிசியைச் சேர்க்கவும்.
3. அப்படியே நன்றாக கலந்து, பால் சேர்த்துக் கெட்டியாகும்படி செய்யவும்.
4. ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதனுடன் வறுத்து வைத்த பாதாம் பருப்பு, உலர் திராட்சைகளைச் சேர்த்துச் சாப்பிடலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.