மாங்காய் சாதம்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. வேக வைத்த சாதம் – 1 கோப்பை
2. துருவிய மாங்காய் – 1 எண்ணம்
3. பச்சை மிளகாய் – 10 எண்ணம்
4. பெருங்காயம் – தேவையான அளவு
5. கடுகு – 1 தேக்கரண்டி
6. உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
7. பச்சை வேர்க்கடலை – 1/2 கோப்பை
8. கருவேப்பிலை – தேவையான அளவு
9. நறுக்கிய கொத்தமல்லி – 1 கைப்பிடியளவு
10. தேங்காய்த் துருவல் – 1 கோப்பை
11. வெந்தய தூள் – 1 தேக்கரண்டி
12. எண்ணெய் – 1/2 கோப்பை
13. மஞ்சள் தூள் – தேவையான அளவு
14. உப்பு – தேவையான அளவு
செய்முறை :
1. பச்சை மிளகாய், பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து கொரகொரவென அரைத்துக் கொள்ளவும்.
2. ஒரு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு உளுந்தம் பருப்பு, நிலக்கடலை போட்டுத் தாளிக்கவும்.
3. அதன் பிறகு மூன்று நிமிடங்கள் அதை நன்றாக வதக்கவும்.
4. அரைத்து வைத்துள்ள விழுதையும், கருவேப்பிலையும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
5. நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி, வெந்தயப் பொடி, சமைத்து வைத்துள்ள சாதம், துருவிய மாங்காய் எல்லாம் சேர்த்து வதக்கவும். (மாங்காய் ரொம்பப் புளிப்பாக இருந்தால் சிறிதளவு சர்க்கரை சேர்த்து கொள்ளலாம்)
6. துருவி வைத்துள்ள தேங்காய்த் துருவலைச் சேர்த்து, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.