ராகிக் கூழ்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. ராகி மாவு - 1 கோப்பை
2. சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி
3. தயிர் - 1/4 கோப்பை
4. பெருங்காயத்தூள் - சிறிது
5. மல்லித்தழை - சிறிது
6. உப்பு - தேவையானஅளவு
செய்முறை :
1. ஒரு பாத்திரத்தில் 2 கோப்பை தண்ணீர் ஊற்றி ராகி மாவு, தேவையான உப்பு சேர்த்துக் கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ள வேண்டும்.
2. அடுப்பில் குறைவான நெருப்பில் வைத்துக் கிளறி விடவும்.
3. ராகிக் கலவை கொதித்துக் கெட்டியான பதம் வரும் வரைக் கிளறி, நன்றாகக் களி போன்று வெந்ததும் கீழே இறக்கி வைக்கவும்.
4. ஒரு கிண்ணத்தில் தயிர், சீரகத்தூள், நறுக்கிய மல்லி தழை, பெருங்காயத்தூள் மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்துக் கலந்து வைக்கவும்.
5. ராகிக்களி மற்றும் தயிர்க் கலவையைக் கலந்து கூழாகக் கரைத்துக் குடிக்க நன்றாக இருக்கும்.
குறிப்பு:
ஊறுகாய், துவையல் என்று ஏதாவதொன்றைத் தொட்டுக் கொண்டு சாப்பிடச் சுவையாக இருக்கும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.