கோதுமைக் கூழ்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. கோதுமை மாவு - 1 கோப்பை
2. வெல்லத்தூள் - 3/4 கோப்பை
3. ஏலக்காய் - 5 எண்ணம்
4. பால் - 1 கோப்பை
செய்முறை :
1. ஒரு கடாயில் அடுப்பை மிதமான தீயில் வைத்து, கோதுமை மாவை வறுக்கவும். அடி பிடிக்காமல் கிளறி விட்டுக் கொண்டே மாவு வாசனை வரும் வரை வறுத்து இறக்கி ஆற விடவும்.
2. வெல்லத்தை 1/2 கோப்பை தண்ணீர் ஊற்றிக் கரைத்து வடிகட்டி வைக்கவும்.
3. பால், தண்ணீர் இரண்டையும் கலந்து ஒரு டம்ளரில் எடுத்துக் கொள்ளவும்.
4. ஆற வைத்த மாவில் சிறிது சிறிதாகத் தண்ணீர் கலந்த பாலை ஊற்றிச் சீராகக் கலக்கவும்.
5. மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் கரைத்த மாவை ஊற்றி அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.
6. கொதி வந்து மாவு வெந்ததும் அதில் வடி கட்டிய வெல்லக் கரைசலை ஊற்றிக் கிளறவும்.
7. நன்கு சீராகக் கட்டிப்படாமல் கிளறிக் கொதிக்க விடவும். கெட்டியாக இருந்தால் கூடுதலாகச் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும்.
8. ஏலக்காயைப் பொடித்து அதனுடன் சேர்த்து, மிதமான சூட்டில் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.