மாங்காய் சாதம்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. அரிசி - 200 கிராம்
2. மாங்காய் - 1எண்ணம் (அதிகம் புளிப்பில்லாதது, சிறியது)
3. மிளகாய் வற்றல் - 4 எண்ணம்
4. வெந்தயத்தூள் - 1/4 தேக்கரண்டி
5. மஞ்சள்தூள் - சிறிது
6. கடுகு - 1/4 தேக்கரண்டி
7. உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
8. கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி
9.பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
10. நிலக்கடலைப் பருப்பு - 25 கிராம்
11. நல்லெண்ணெய் -25 கிராம்
12. உப்பு - 1 தேக்கரண்டி
13. கறிவேப்பிலை - சிறிது.
செய்முறை :
1. அரிசியைக் கழுவி 2 1/2 கிண்ணம் தண்ணீர் விட்டுக் குழையாமல் வேக வைத்து ஒரு தட்டில் ஆற வைத்துக் கொள்ளவும்.
2. மாங்காயைத் துருவிக் கொள்ளவும். நிலக்கடலையை நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.
3. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு போட்டு தாளித்து பின் கறிவேப்பிலை, மிளகாய் வற்றல், பெருங்காயம், வெந்தயத் தூள், மஞ்சள் தூள் போட்டு வதக்கவும்.
4. துருவிய மாங்காயைப் போட்டு நன்றாக வதக்கவும். பின்பு உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து இறக்கவும்.
5. இதில் ஆறிய சாதம், வறுத்த நிலக்கடலைப்பருப்பு போட்டு, சாதம் குழையாமல் கிளறி வைக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.