கல்கண்டு பொங்கல்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. பச்சரிசி - 200 கிராம்
2. கல்கண்டு - 200 கிராம்
3. பால் - 200 மி.லி.
4. நெய் - 2 மேசைக்கரண்டி
5. ஏலக்காய் தூள் - ஒரு சிட்டிகை
6. முந்திரி பருப்பு - 10 எண்ணம்
7. கிஸ்மிஸ் பழம் (உலர் திராட்சை) - 10 எண்ணம்.
செய்முறை :
1. அரிசியைச் சுத்தமாகக் கழுவித் தண்ணீர் வடித்து அத்துடன் பால், சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைத்து எடுக்கவும்.
2. வேக வைத்த அரிசியை நன்றாக மசித்து விடவும்.
3. அதில் கல்கண்டைப் பொடி செய்து சேர்த்துக் கலக்கவும்.
4. மிதமான தீயில் கிளறிக் கொண்டே இருக்கவும்.
5. கல்கண்டு கரைந்து சாதத்துடன் நன்றாகக் கலந்ததும், நெய்யைச் சேர்த்துக் கிளறி விடவும்.
6. முந்திரி, உலர் திராட்சை இரண்டையும் சிறிது நெய்யில் வறுத்துப் பொங்கலுடன் சேர்க்கவும்.
7. கடைசியில் ஏலக்காய்த் தூளைத் தூவி, நன்றாகக் கலந்து இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.