சேமியா மசாலா பொங்கல்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. சேமியா - 500 கிராம்
2. சின்ன வெங்காயம் - 10 எண்ணம்
3. பூண்டு - 10 பல்
4. இஞ்சி - சிறிய துண்டு
5. வெந்தயக்கீரை - 1 கப்
6. பாசிப்பருப்பு - 150 கிராம்
7. எண்ணெய் - தேவையான அளவு
8. உப்பு - தேவையான அளவு
9. மல்லித்தழை - சிறிது
வறுத்து பொடிக்க
10. மிளகாய் - 4 எண்ணம்
11. மல்லி - 1 தேக்கரண்டி
12. சீரகம் - 1/2 தேக்கரண்டி
13. மிளகு - 1/2 தேக்கரண்டி
14. பட்டை - சிறிது
15. ஏலக்காய் - 2 எண்ணம்
16. கிராம்பு - 1 எண்ணம்.
செய்முறை :
1. பாசிப்பருப்பை சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளவும்.
2. ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி மிளகாய், மல்லி, சீரகம், மிளகு, பட்டை, ஏலக்காய், கிராம்பு போட்டு லேசாக வறுத்து, அதைக் கரகரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
3. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கிச் சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சியைப் போட்டு வதக்கிப் பின் வெந்தயக் கீரை போட்டு இலேசாக வதக்கவும்.
4. வேக வைத்த பாசிப்பருப்பைச் சேர்த்து, தண்ணீரையும் சேர்த்து உப்பு போட்டுக் கொதிக்க விட வேண்டும்.
5. சேமியாவை ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வறுத்துக் கொள்ளவும்.
6. கடைசியாகச் சேமியாவைக் கொதிக்கும் நீரில் போட்டு நன்றாகக் கிளறவும்.
7. அரைத்து வைத்துள்ள மசாலாப் பொடியையும் சேர்த்து ஒரு மூடி போட்டு மூடி வேக விடவும்.
8. கடைசியாக மல்லித்தழை தூவி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.