ஓட்ஸ் பொங்கல்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. ஓட்ஸ் – 200 கிராம்
2. பாசிப்பருப்பு – 50 கிராம்
3. ஏலக்காய் – 4 எண்ணம்
4. முந்திரிப் பருப்பு – 10 எண்ணம்
5. வெல்லத்தூள் – 100 கிராம்
6. நெய் – 100 கிராம்
செய்முறை :
1. ஓட்ஸைத் தண்ணீர் தெளித்து ஊற வைக்கவும்.
2. பாசிப்பருப்பை வேக வைத்து வைக்கவும்.
2. வேக வைத்த பாசிப்பருப்பு, ஊற வைத்த ஓட்ஸை வாணலியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு கிளறவும்.
3. ஓட்ஸ் வெந்து வரும் போது வெல்லத்தூளைச் சேர்த்துக் கிளறவும்.
4. கெட்டியாகிப் பச்சை வாசனை போனதும், கொஞ்சம் நெய் விட்டுக் கிளறவும்.
5. வறுத்த முந்திரி, பொடித்த ஏலக்காய், மீதமுள்ள நெய் விட்டுக் கலந்து இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.