பச்சைப் பயறு பொங்கல்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. பச்சரிசி - 250 கிராம்
2. பச்சைப் பயறு- 100 கிராம்
3. வெங்காயம் - 50
4. இஞ்சி - சிறிது
5. மிளகு - 10 எண்ணம்
6. சீரகம் - 20 கிராம்
7. நெய் - 1 தேக்கரண்டி
8. உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
1. பச்சரிசி, பச்சைப் பயறு இரண்டையும் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
2. ஊற வைத்த பச்சரிசி, பச்சைப் பயறு போன்றவற்றுடன் உப்பு சேர்த்து நன்கு வேக வைத்து இறக்கவும்.
3. ஒரு வாணலியில் சிறிது நெய் ஊற்றி மிளகு, சீரகம் போட்டுத் தாளிக்கவும்.
4. தாளிசத்துடன் இஞ்சி ,வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
5. வதக்கியவற்றைப் பொங்கலில் சேர்த்துக் கிளறவும்.
6. கடைசியாக நெய் சேர்த்து இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.