வரகுப் பொங்கல்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. வரகு அரிசி - 200 கிராம்
2. பாசிப் பருப்பு - 150 கிராம்
3. மிளகு -10 எண்ணம்
4. சீரகம் - 1/2 தேக்கரண்டி
5. இஞ்சி- சிறு துண்டு
6. நெய்-1 மேசைக்கரண்டி
7. கருவேப்பிலை - சிறிது
8. மல்லித்தழை - சிறிது
9. உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
1. வரகு, பாசிப் பருப்பு இரண்டையும் நன்றாகக் கழுவி, சிறிது நேரம் ஊற வைக்கவும்.
2. ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் வைத்து, அதில் ஊற வைத்த வரகு மற்றும் பாசிப்பருப்பைக் களைந்து போடவும்.
3. அத்துடன் தேவையான உப்பு சேர்த்து வேக வைக்கவும். வெந்த பின்பு இறக்கி ஆற வைக்கவும்.
4. வாணலியில் நெய் ஊற்றிக் காய்ந்ததும், மிளகு, சீரகம், இஞ்சி ஆகியவற்றைப் போட்டுத் தாளிக்கவும்.
5. வேகவைத்து ஆற வைத்திருக்கும் வரகு, பாசிப்பருப்புடன் தாளிசப் பொருட்கள் மற்றும் கருவேப்பிலை,மல்லித்தழையைத் தூவவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.