குதிரை வாலி அரிசிப் பொங்கல்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. குதிரை வாலி அரிசி - 150 கிராம்
2. பாசிப் பருப்பு - 100 கிராம்
3. எண்ணை - 2 தேக்கரண்டி
4. நெய் - 2 தேக்கரண்டி
5. மிளகு - 1 தேக்கரண்டி
6. சீரகம் - 1 தேக்கரண்டி
7. பச்சை மிளகாய் - 4 எண்ணம்
8. இஞ்சி - சிறிது
9. முந்திரிப் பருப்பு - 1 மேசைக்கரண்டி
10. கருவேப்பிலை - சிறிது
11. மல்லித்தழை - சிறிது.
செய்முறை :
1. பாசிப்பருப்பு மற்றும் குதிரை வாலி அரிசியை களைந்து ஊற வைக்கவும்.
2. ஒரு பாத்திரத்தில் தேவையான தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். நன்கு கொதி வந்ததும், அதில் ஊறிய அரிசி, பாசிப்பருப்பு மற்றும் உப்பைச் சேர்த்து வேக வைக்கவும்.
3. பச்சை மிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
4. ஒரு வாணலியில் நெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் முந்திரிப்பருப்பு, கருவேப்பிலை போட்டு இலேசாக வறுத்து வைக்கவும்.
5. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் மிளகு, சீரகம், பச்சை மிளகாய், இஞ்சி போட்டுத் தாளிக்கவும்.
6. அரிசி, பாசிப்பருப்பு முக்கால் பதம் வெந்ததும், தாளித்து வைத்துள்ள பொருட்கள், வறுத்து வைத்திருக்கும் முந்திரிப்பருப்பு போன்றவைகளைச் சேர்க்கவும்.
7. அரிசி வெந்தவுடன் மிதமான நெருப்பில் வைத்து நெய் ஊற்றிக் கிளறி, மல்லித்தழை தூவி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.