திருவாதிரைக் களி
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. பச்சரிசி- 100 கிராம்
2. பாசிப்பருப்பு-2 தேக்கரண்டி
3. வெல்லம்- 100 கிராம்
4. தேங்காய்த் துருவல்-2 தேக்கரண்டி
5. ஏலக்காய்-1 எண்ணம்
6. முந்திரி-7 எண்ணம்
7. நெய்-2 மேசைக் கரண்டி
8. உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
1. ஒரு வாணலியில் அரிசி, பாசிப்பருப்பைப் போட்டு இலேசாக வறுத்துக் கொள்ளவும்.
2. வறுத்த அரிசி, பருப்பு ஆகியவற்றை ரவை போல பொடித்துக் கொள்ளவும்.
3. வெல்லத்தைச் சிறிது தண்ணீர் விட்டுச் சூடாக்கிக் கரைந்ததும் வடிகட்டிக் கொள்ளவும்.
4. ஒரு பாத்திரத்தில் வெல்லத் தண்ணீருடன் பாதியளவு தண்ணீர் சேர்த்துச் சூடாக்கவும்.
5. தண்ணீர் கொதிவந்ததும் உப்பு சேர்த்து தேங்காய்த் துருவல் சேர்க்கவும்.
6. அத்துடன் ரவை போல் பொடித்து வைத்த அரிசி, பருப்பைச் சேர்த்து வேக விடவும்.
7. ஒரு வாணலியில் நெய்யைக் காய வைத்து முந்திரியைப் பொன்னிறமாக வறுத்துக் களியில் சேர்க்கவும்.
8. கடைசியாக ஏலக்காய் பொடித்துச் சேர்த்துக் கலந்து இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.