சர்க்கரைப் பொங்கல்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. பச்சரிசி - 400 கிராம்
2. பாசிப்பருப்பு - 50 கிராம்
3. பால் - 250 மி.லி
4. தேங்காய் - பாதி
5. வெல்லம் - 1 கிலோ
6. முந்திரிப்பருப்பு -15 கிராம்
7. கிஸ்மிஸ் பழம் - 15 கிராம்
8. ஏலக்காய் - 5 கிராம்
9. நெய் - 50 மி.லி
செய்முறை:
1.பாசிப்பருப்பை இலேசாக வறுத்து வைக்கவும்.
2. ஒரு பாத்திரத்தில் 2 லிட்டர் தண்ணீர் ஊற்றி அதில் பாலைக் கலந்து அடுப்பில் வைக்கவும்.
3. வேறொரு பாத்திரத்தில் வெல்லத்தைத் தட்டிப்போட்டு சிறிது தண்ணீர் கலந்து இளம் பாகாய்க் காய்ச்சி கல் இல்லாமல் வடிகட்டி வைக்கவும்.
4. நெய்யைக் காய வைத்து முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ், பொடிதாக நறுக்கப்பட்ட தேங்காய் ஆகியவற்றை சிவக்க வறுக்கவும்.
5. வறுக்கப்பட்ட பொருள்கள், வெல்லப்பாகு, தேங்காய்த் துருவல் அனைத்தையும் சாதத்துடன் கலந்து இலேசான வெப்பத்தில் வைத்து ஏலக்காய்த் தூள் போட்டு இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.