கம்புச் சாதம்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
கம்பு - 1 கப்
உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
1. கம்பை ஊற வைத்துத் தண்ணீர் வடித்து விட்டு நன்றாகப் பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
2. ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் வைத்து நன்கு சூடான பிறகு அரைத்து வைத்த கம்பு மாவு, தேவையான உப்பு சேர்த்துக் கிளறவும்.
3. நன்றாக வெந்த பின்பு இறக்கி விடவும்.
குறிப்பு
சைவ உணவாளர்கள் கம்பு சாதத்துடன் சாம்பார் சேர்த்துச் சாப்பிடலாம்.
அசைவ உணவாளர்கள் கறிக்குழம்பு, மீன் குழம்பு, கருவாட்டுக் குழம்பு என்று அவரவர் விருப்பத்திற்கேற்ப சேர்த்துக் கொண்டு சாப்பிடலாம்.
கம்பு கூழ்
தேவையான பொருட்கள்:
1. கம்பு சாதம் - 2 உருண்டை
2. மோர் - 1 கப்
3. உப்பு - தேவையான அளவு
செய்முறை :
1. கம்பு சாதத்தை உருண்டையாக பிடித்து முதல் நாள் இரவே தண்ணீரில் போட்டு வைக்கவும்.
2. மறுநாள் காலை அதில் மோர் சேர்த்து நன்றாகக் கரைத்தால் கூழாகக் குடிக்கலாம்.
குறிப்பு
வறுத்த சீனிஅவரைக்காய் வற்றல் (கொத்தவரை வற்றல்), சின்ன வெங்காயம் அல்லது பச்சை மிளகாய் போன்றவற்றைக் கூழ் குடிக்கும் போது இடையிடையே சேர்த்துச் சாப்பிடலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.