பனீர் புலவு
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. பாசுமதி அரிசி - 2 கோப்பை
2. பெரிய வெங்காயம் - 2 எண்ணம்
3. தக்காளி - 3 எண்ணம்
4. பனீர் - 200 கிராம்
5. இஞ்சிப்பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
6. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
7. உப்பு - தேவையான அளவு
8. மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
9. எலுமிச்சம்பழச் சாறு - 2 மேசைக்கரண்டி
10. நெய் - 2 தேக்கரண்டி
11. எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
12. பட்டை, இலவங்கம், ஏலக்காய் - 2 எண்ணம் (ஒவ்வொன்றும்)
13. சீரகம் - 1/2 தேக்கரண்டி
செய்முறை :
1. பாசுமதி அரிசியைக் கழுவி தண்ணீரில் ஊறவையுங்கள்.
2. வெங்காயத்தை நீளவாக்கிலும், தக்காளியைப் பொடியாகவும், பனீரைச் சிறிது பெரிய துண்டுகளாகவும் நறுக்கி வைக்கவும்.
3. ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் பட்டை, இலவங்கம், ஏலக்காய், சீரகம் போட்டுத் தாளிக்கவும்.
4. தாளிசத்துடன் வெங்காயம், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
5. வெங்காயம் நன்கு வதங்கியதும், இஞ்சிப்பூண்டு விழுது, பனீர் துண்டுகள் சேர்த்துப் பச்சை வாசனை போக வதக்கவும்.
6. அதனுடன் தக்காளி, மிளகாய்த்தூள், எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.
7. பின்னர் அதில் ஊறவைத்த பாசுமதி அரிசியைத் தண்ணீருடன் சேர்த்து, உப்பு போட்டு வேகவைத்து இறக்கவும்..
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.