பால் கஞ்சி
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. புழுங்கல் அரிசி - 1/2 கப்
2. பால் - 1 கப்
3. பூண்டு - 8 பற்கள்
4. வெந்தயம் - 2 தேக்கரண்டி
5. உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
1. அரிசியைத் தண்ணீர் ஊற்றிக் களைந்து கொள்ளவும்.
2. ஒரு பாத்திரத்தில் அரிசி, பூண்டு, வெந்தயம், உப்பு ஆகியவற்றுடன் 4 கப் நீர் சேர்த்துக் குழைய வேக வைக்கவும்.
3. வேக வைத்த கஞ்சியுடன் பால் சேர்த்து ஒரு கொதி கொதிக்க விடவும்.
குறிப்பு: இக்கஞ்சிக்குத் துவையல், மோர் மிளகாய், வற்றல், வடகம் போன்றவைகளைத் துணை உணவாக வைத்துச் சாப்பிடலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.