நெல்லிக்காய் சாதம்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. வடித்த சாதம் - 1 கப்
2. பெரிய நெல்லிக்காய்த் துருவல் - 1/4 கப்
3. எலுமிச்சைச் சாறு - 1 தேக்கரண்டி
4. எண்ணெய் - 1 தேக்கரண்டி
4. தேங்காய்த் துருவல் - 1 தேக்கரண்டி
5. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
6. கடுகு - 1/4 தேக்கரண்டி
7. மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
8. பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
9. உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
1. கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு போட்டுத் தாளிக்கவும்.
2. அதனுடன் மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய், நெல்லிக்காய்த் துருவல், தேங்காய்த் துருவல், உப்பு சேர்த்து வதக்கி இறக்கவும்.
3. இலேசாக ஆறியதும், அதில் எலுமிச்சைச் சாறை விட்டு, வடித்த சாதத்துடன் சேர்த்துக் கிளறிப் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.