உளுந்து சாதம்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. பபுழுங்கல் அரிசி - 300 கிராம்
2. தோலுடன் உள்ள உளுந்து - 150 கிராம்
3. சீரகம் - 10 கிராம்
4. வெந்தயம் - 10 கிராம்
5. பூண்டு - 50 கிராம்
6. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் 700 மி.லி தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
2. அதில் அரிசி மற்றும் உளுந்தைச் சேர்த்து வேக வைக்கவும்.
3. சீரகம், வெந்தயம், பூண்டு ஆகியவற்றைச் சேர்க்கவும்..
4. வேகவைக்கப்பட்ட சாதத்தில் தேவையான உப்பு சேர்த்து சிறிது நேரம் கழித்து இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.