மிளகுச் சாதம்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. அரிசி - 1 கப்
2. மிளகு - 3 தேக்கரண்டி
3. நெய் - 1 மேசைக்கரண்டி
4. எண்ணெய் - 1 தேக்கரண்டி
5. தேங்காய்த்துருவல் - 1 மேசைக்கரண்டி
6. கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
7. உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
8. முந்திரிப்பருப்பு - 10 எண்ணம்
9. உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
1. அரிசியைக் கழுவித் தேவையான தண்ணீர் சேர்த்து உதிரியாக வேக வைத்தெடுக்கவும்.
2. ஒரு வாணலியில் எண்ணைய் ஊற்றிக் காய்ந்ததும் விட்டு அதில் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு இரண்டையும் சிவக்க வறுத்தெடுக்கவும்.
3. அதே வாணலியில் தேங்காய்த்துருவலைப் போட்டு வதக்கி எடுக்கவும்.
4. வறுத்து எடுத்த பருப்புகள், தேங்காய்த்துருவல் ஆறியவுடன், அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து பொடியாக அரைத்தெடுக்கவும்.
5. மிளகை பொடித்துக் கொள்ளவும்.
6. ஒரு வாணலியில் நெய் விட்டுக் காய்ந்ததும், அதில் முந்திரிப்பருப்பைப் போட்டு சற்று சிவக்க வறுக்கவும்.
7. அதில் மிளகுப்பொடியையும் சேர்த்து வறுத்து, அத்துடன் சாதத்தைச் சேர்த்துக் கிளறவும்.
8. நன்கு கிளறிய பிறகு அதனுடன் அரைத்து வைத்துள்ள பருப்பு, தேங்காய்ப் பொடி, உப்பு ஆகியவற்றையும் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.