ரவா வெஜிடபிள் பொங்கல்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. பாம்பே ரவை -1கப்
2. பாசிப்பருப்பு -1/2கப்
3. கேரட் , பீன்ஸ், நூல்க்கோல், குடமிளகாய் போன்ற காய்கறித்துண்டுகள் -1கப்
4. பச்சைப்பட்டாணி -1/2கப்
5. தக்காளி -1எண்ணம்
6. பச்சைமிளகாய் -4 எண்ணம்
7. இஞ்சித் துருவல் -1தேக்கரண்டி
8. நெய் - 50கிராம்
9. எண்ணெய் - தேவையான அளவு
10. உப்பு - தேவையான அளவு
11. மல்லித்தழை - சிறிது.
செய்முறை :
1. ரவையை வெறும் வாணலியில் வறுத்து வைக்கவும்.
2. பாசிப்பருப்பை வறுத்து நீர் விட்டு வேகவிடவும்.
3. ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு காய்கள், தக்காளி, பச்சைமிளகாய்,இஞ்சித் துருவல் அனைத்தையும் ஒரு நிமிடம் வதக்கி, உப்பும், நீரும் சேர்த்து வேக விடவும்.
4. வெந்த பாசிப்பருப்பைச் சேர்க்கவும்.
5. தளர்ச்சியான கலவையில் ரவையை சிறிது சிறிதாக தூவி மசித்து கிளறவும்.
6. அரைமூடி எலுமிச்சைச்சாறும், நெய்யும் சேர்த்துக் கிளறவும்.
7. மல்லித்தழை தூவி சூடாகப் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.