சர்க்கரைப் பொங்கல்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. பச்சை அரிசி - 1/2 கிலோ
2. வெல்லம் - 1/4 கிலோ
3. பாசிப்பருப்பு - 100 கிராம்
4. நெய் - 50 கிராம்
5. முந்திரிப்பருப்பு - 50 கிராம்
6. திராட்சை - 50 கிராம்
7. சுக்கு பொடி - 1 தேக்கரண்டி
8. ஏலக்காய் - 4 எண்ணம்
9. பால் - 100 மிலி
10. உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
1. பச்சரிசி, பாசிப்பருப்பு ஆகியவற்றைத் தண்ணீரில் நன்றாக கழுவிச் சுத்தம் செய்து கொள்ளவும்.
2. ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் (1 1/2 லிட்டர்), பால் கலந்து மிதமான நெருப்பில் வைக்கவும்.
3. கொதித்தவுடன் அதில் சிறிது உப்பு போட்டுக் கிளறி விடவும்.
4. கழுவிச் சுத்தம் செய்து வைத்திருக்கும் அரிசி மற்றும் பருப்பை அதனுடன் சேர்த்து வேக வைக்கவும். அடிப்பிடித்து விடாமல் கிளறி விடவும்.
5. ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் நெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் முந்திரிப் பருப்பு, திராட்சை போன்றவைகளைப் போட்டுப் பொன்னிறமாக வறுத்து வைத்துக் கொள்ளவும்.
6. அரிசியும் பருப்பும்தண்ணீர் இல்லாமல் பொங்கல் பதமாக இருக்கும் பொழுது, வெல்லத்தைத் தூளாக்கிப் பொங்கலுடன் சேர்த்துக் கிளறி விடவும்.
7. அத்துடன் சுக்குப் பொடியைப் போட்டு மீண்டும் கிளறி விடவும்.
8. அதனுடன் வறுத்து தயாராக வைத்துள்ள முந்திரிப்பருப்பு, திராட்சை ஆகியவற்றைப் போட்டுக் கிளறவும்.
9. கடைசியாக நெய் ஊற்றி கிளறி விட்டு, ஏலக்காய் பொடி போட்டு இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.